Home இந்தியா உலகம் முழுவதும் ஒரே தரத்தில்தான் மேகி நூடுல்ஸ் தயாரிப்பு – நெஸ்லே நிறுவனம் விளக்கம்!

உலகம் முழுவதும் ஒரே தரத்தில்தான் மேகி நூடுல்ஸ் தயாரிப்பு – நெஸ்லே நிறுவனம் விளக்கம்!

610
0
SHARE
Ad

maggiபுதுடெல்லி, ஜூன் 5 – மேகி பாதுகாப்பான  உணவு என்பதில் நெஸ்லே நிறுவனம் உறுதியாக உள்ளது என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மேகி நூடுல்ஸ் மீதான நுகர்வோர் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது பற்றிக் கவலை அடைந்துள்ளதாகவும், மேலும் அண்மையில் உருவாகியுள்ள சர்ச்சை துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் சந்தேகங்களைப் போக்குவதே நிறுவனத்தின் முதல் குறிக்கோள் என்றுஅந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோனோ சோடியம் குளூடாமேட் என்ற ரசாயனத்தை மேகியில் சேர்க்கவில்லை என்றும், மேகி நூடுல்சில் தடைசெய்யப்பட்ட ரசாயனம் உள்ளதாக வந்த புகாருக்கு நெஸ்லே நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அதிகாரிகளின் ஆட்சேபத்தால் நூடுல்சைச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளோம் என்று நெஸ்லே நிறுவனத் தலைமை அதிகாரி பால் பல்கே பேட்டியளித்துள்ளார். உலகம் முழுவதும் ஒரே தரத்திலேயே மேகி நூடுல்ஸ் தயாரிக்கப்படுகிறது என்று அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

Maggiiதாங்கள் மேற்கொண்ட ஆய்வில் நூடுல்ஸ் பாதுகாப்பானது என நிரூபனம் ஆகியுள்ளதாகப் பால் பால்கே தெரிவித்துள்ளார். மேகி நூடுல்ஸுல் காரீயமும் அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவாகவே உள்ளது என்றும், இந்திய அரசு அதிகாரிகளுடன் நெஸ்லே நிறுவனம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அரசின் விசாரணைக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைக்கத் தயார் என்று நெஸ்லே நிறுவனத் தலைமை அதிகாரி பால் பல்கே தெரிவித்துள்ளார். மேகி நூடுல்ஸ் மீதான தடை மேலும் பலமாநிலங்களில் விரிவடைகிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைத் தொடர்ந்து பீகாரிலும் மேகிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பீகாரில் ஒரு மாதத்திற்கு மேகி நூடுல்ஸ் விற்கக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அசாம் மாநில அரசும் மேகி சிக்கன் நூடுல்ஸுக்கு இன்று முதல் தடை விதித்துள்ளது.