Home உலகம் மனித உரிமைகள் நிலையை முன்னேற்ற இலங்கைக்கு அமெரிக்கா உதவும்!

மனித உரிமைகள் நிலையை முன்னேற்ற இலங்கைக்கு அமெரிக்கா உதவும்!

504
0
SHARE
Ad

sri-lankaநியூயார்க், ஜூன் 5 – நல்லாட்சியை ஊக்குவிக்கவும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கும் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவும் என்றும், அமெரிக்கத் துணை அதிபர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நேற்று அனைத்துலக வர்த்தகப் பேரவையில் உரையாற்றிய  அமெரிக்கத் துணை அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய அமெரிக்கத் துணை அதிகாரியான அவர்,

ஜனநாயக வழியில் நல்லாட்சியை ஊக்குவிக்கவும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கும் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும்.

#TamilSchoolmychoice

இலங்கையின் ஆட்சி முறையைப் பலப்படுத்த அமெரிக்கா உதவத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக நீதி மற்றும் நிதி அமைப்புகளை வலுப்படுத்த உதவிகள் அளிக்கப்படும். இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

புதிய அதிபர் பிரிவினை அரசியல் மற்றும் போலி முதலாளித்துவத்தில் இருந்து விலகி, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை நோக்கிய புதிய பாதையில் செல்கிறார்.அந்தப் புதிய பாதையில் பயணிக்கும் இலங்கைக்கு அமெரிக்கா நிறைய  உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

நல்லாட்சி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் போது,  இந்தியப் பெருங்கடலில், கடல்சார் பாதுகாப்பு விவகாரத்தில், இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.