Home நாடு நிலநடுக்கத்திற்கு ‘நிர்வாணமாகப்’ படம் எடுத்தது தான் காரணம் – சபாவாசிகள் கருத்து

நிலநடுக்கத்திற்கு ‘நிர்வாணமாகப்’ படம் எடுத்தது தான் காரணம் – சபாவாசிகள் கருத்து

526
0
SHARE
Ad

sabah_naked_2_0206_620_348_100கோத்தா கினபாலு, ஜூன் 5 – சபா மாநிலத்தில் ரணாவ் பகுதியில் இன்று காலை 7.17 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு, அண்மையில் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் சிலர் நிர்வாணமாகப் படம் எடுத்துக் கொண்டதும்,சிறுநீர் கழித்து அசுத்தம் செய்ததும் தான் காரணம் என அம்மாநிலத்தைச் சேர்ந்த மலைப் பாதுகாப்பாளர்கள் கோபமுற்றுள்ளனர்.

தனது பெயரைக் கூறிக் கொள்ள விரும்பாத சபா மாநிலத்தைச் சேர்ந்த இணைய மேம்பாட்டாளர் ஒருவர், சுற்றுலாப் பயணிகள் நிர்வாணமாக படம் எடுத்துக் கொண்டதும், சிறுநீர் கழித்ததும் தான் மலையில் உள்ள சக்திகளைக் குழப்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

என்றாலும், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற ஊடகங்களில், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும், சிலர் குழப்பங்களை விளைவிப்பதற்காகவே நிலநடுக்கத்தைக் காரணம் கூறுவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

ஐரோப்பாவைச் சேர்ந்த 27 பேர் கொண்ட குழு கடந்த மே 10ஆம் தேதி இப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது 10 பேர் மட்டும் தனியாகப் பிரிந்து சென்று நிர்வாணமாகப் படம் எடுத்துக் கொண்டு இணையத்தில் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.