Home இந்தியா ஜெயலலிதா வழக்கில் மீண்டும் வழக்கறிஞர் ஆச்சார்யா – கர்நாடக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜெயலலிதா வழக்கில் மீண்டும் வழக்கறிஞர் ஆச்சார்யா – கர்நாடக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

509
0
SHARE
Ad

jaya_aacharyaகர்நாடகா, ஜூன் 6 – ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வழக்கறிஞர் ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அமைச்சரவை கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து இந்த வழக்கில், அரசு வழக்கறிஞராக உயர் நீதிமன்றத்தில் ஆஜரான ஆச்சாரியாவையும், அவரின் உதவிக்காக வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டாவையும் உச்ச நீதிமன்றத்திலும் தொடரச் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அதற்கான அரசாணை, இன்று கர்நாடக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும், ஜூலை 1-ஆம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு செய்ய கர்நாடக தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.