Home நாடு கினபாலு சிகரத்தின் ‘கழுதைக் காது’ மலைப்பகுதி நொறுங்கியது!

கினபாலு சிகரத்தின் ‘கழுதைக் காது’ மலைப்பகுதி நொறுங்கியது!

615
0
SHARE
Ad

20160605_donkeyear_sabahtremor-thestarகோத்தகினபாலு, ஜூன் 6 – சபாவில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 7.17 மணியளவில் நிகழ்ந்த 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் போது கினபாலு சிகரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்த ‘கழுதைக் காது’ மலைப்பகுதி உடைந்தது.

பார்ப்பதற்கு அச்சு அசலாக கழுதையின் காதுகளைப் போலவே காட்சி அளிக்கும் இந்த மலைப்பகுதி இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வந்தது.

இந்நிலையில் நிலநடுக்கத்தின்போது கழுதையின் காதுகளைப் போல் காட்சி தரும் மலைப்பகுதி அதிர்வுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே விழுந்தது. இதை சபா மாநில சுற்றுலா, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ மசிடி மன்ஜுன் உறுதி செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

“வருத்தமான செய்தி உறுதியானது. கழுதைக்காது மலைப்பகுதி நிலநடுக்கத்தால் அழிந்து போனது,” என்று டிவிட்டர் பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலை உச்சியில் சிக்கியுள்ள மலையேற்று வீரர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையே சபா பூங்காவின் தலைவர் தெங்கு டத்தோ சைனல் அட்லினும் கழுதைக்காது மலைப் பகுதிக்கு ஏற்பட்ட சேதத்தை உறுதி செய்தார்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களின் முழு விவரமும் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் கழுதைக்காது மலைப்பகுதிக்கு ஏற்பட்டுள்ள கதி சபா மக்களை வருத்தத்தில் மூழ்கடித்துள்ளது.