சைக்கிள் ஓட்டுதலை சில வருடங்களாகவே தீவிரமாய் மேற்கொண்டு வந்த ஆர்யா, தற்போது தனது தீரா பயிற்சி தந்துள்ள உத்வேகம் மற்றும் நம்பிக்கையின் விளைவாய் அனைத்துலக சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்க உள்ளார்.
அதன் முதற்படியாக தனது அனைத்துலக சைக்கிள் பந்தய அணி புகைப்படத்தை (ரைடர்ஸ் லோகோவை) வெளியிட்டுள்ளார். தனது முதல் அனைத்துலக போட்டியினைப் பற்றி ஆர்யா குறிப்பிடுகையில்;
“அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்கள், மலைகள், சீரற்ற எதிர்காற்று என பல்வேறு சவால்களை கடந்து 300 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 15 மணி நேரத்திற்குள் முடித்தாக வேண்டும். இதற்காக கடந்த 8 மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்” என்றார் ஆர்யா.