Home உலகம் இந்திய-அமெரிக்க நட்புறவை மேம்படுத்த ஒபாமா தவறிவிட்டார் – ரிக் பெர்ரி!

இந்திய-அமெரிக்க நட்புறவை மேம்படுத்த ஒபாமா தவறிவிட்டார் – ரிக் பெர்ரி!

503
0
SHARE
Ad

perryவாஷிங்டன், ஜூன் 7 – இந்திய-அமெரிக்க நட்புறவை சிறப்பான முறையில் மேம்படுத்த பல்வேறு சிறந்த சந்தர்ப்பங்கள் அமைந்தன. ஆனால் அத்தனை சந்தர்ப்பங்களையும் ஒபாமா வீணடித்துவிட்டார் என அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் ரிக் பெர்ரி குற்றம்சாட்டி உள்ளார்.

விரைவில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடும் ரிக் பெர்ரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்தியா-அமெரிக்கா நட்புறவு பற்றி கூறுகையில், “இந்தியாவுடன் நட்புறவை வளர்ப்பதில் நாம் போதுமான நேரத்தை செலவிடவில்லை. அதற்கான முயற்சிகளையும் நாம் எடுக்க வில்லை. இந்திய-அமெரிக்க நட்புறவை சிறப்பான முறையில் மேம்படுத்த பல்வேறு சிறந்த சந்தர்ப்பங்கள் அமைந்தன. ஆனால் அத்தனை சந்தர்ப்பங்களையும் ஒபாமா வீணடித்துவிட்டார்.”

“அமெரிக்காவிடம் ஃபைட்டர் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா தயாராக இருந்தது. ஆனால், அமெரிக்கா இந்தியாவின் இந்த முயற்சியை பயன்படுத்திக் கொள்ள வில்லை. அதன் காரணமாக இந்தியா, பிரெஞ்சு விமானங்களை வாங்கியது. இந்தியா மற்றும் அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் போதிய அனுபவம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். உலகின் பல பகுதிகளிலும் உள்ள நாடுகளுடன் எப்படி நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது கூட இவர்களுக்கு தெரியவில்லை.”

#TamilSchoolmychoice

“ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்த முயற்சி, ஐஎஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாமல் இருந்தது போன்ற விவகாரங்களில் ஒபாமாவின் நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவையாக அமைந்தன. என்னைப் பொறுத்தவரையில், உள்நாட்டில் பலவீனமாக இருந்தால் வெளிநாடுகளிலும் அந்த பலவீனம் தொடரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.