Home மலேசியா சபா மீட்புப் பணிகளில் ஏர் ஏசியாவும் கைகோர்த்தது!

சபா மீட்புப் பணிகளில் ஏர் ஏசியாவும் கைகோர்த்தது!

617
0
SHARE
Ad

kamarudheenகுண்டாசாங் (சபா), ஜூன் 8 – நிலநடுக்கத்திற்குப் பிறகு சபாவில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் ஏர் ஏசியா நிறுவனம், மலேசிய தன்னார்வ தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் சேர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.

இது தொடர்பாக ஏர் ஏசியா நிர்வாகத் தலைவர் டத்தோ கமருதீன் மெரனுன் கூறுகையில், “சபாவில் ஏற்பட்ட நில அதிர்வு எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏர் ஏசியா, மலேசிய தன்னார்வ தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் சேர்ந்து பல்வேறு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மீட்புப் பணிகளின் முதற்கட்டமாக மலேசியத் தன்னார்வ அமைப்பின் நிவாரணப் பொருட்கள், விமானம் மூலம் கோத்தா கினபாலுவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.”

“மேலும் இந்தப் பணிகளின் அடுத்த கட்ட நடவடிக்கையாக 350 பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் கேஎல்ஐஏ2 விமான நிலையத்தில் இருந்து கோத்தா கினபாலுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் கம்பளிகள் உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைய ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.”

#TamilSchoolmychoice

“அதுமட்டுமல்லாமல் சபாவின் மீட்புப் பணிகளுக்கான செயல்பாட்டுக் குழு சில முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. அங்குள்ளவர்களுடன் நாங்கள் தொடர்ச்சியாகத் தொடர்பில் உள்ளோம். அவர்கள் கேட்டுக் கொண்டால் மீட்புப் பணி வீரர்களின் போக்குவரத்திற்கும் உதவத் தயாராக உள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.