Home தொழில் நுட்பம் அமெரிக்கா வைத்த ‘எந்திரன்’ தேர்வில் தென் கொரிய ரோபோவிற்கு முதல் பரிசு!

அமெரிக்கா வைத்த ‘எந்திரன்’ தேர்வில் தென் கொரிய ரோபோவிற்கு முதல் பரிசு!

559
0
SHARE
Ad

DRC2கலிபோர்னியா, ஜூன் 8 – தென் கொரிய மாணவர்கள் உருவாக்கிய ரோபோ, அமெரிக்காவின் கடினமான ‘தர்பா’ (DARPA) எந்திரவியல் சவாலில் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சிப் பணித்திட்ட அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்படும் ரோபோக்களைக் கடுமையான சவால்களுக்கு உட்படுத்தி அதில் தேர்வாகும் ரோபோக்களுக்கும், அதனை உருவாக்கியர்களுக்கும் சான்றுகள் அளித்துக் கவுரவிக்கும்.

DRC1இந்தாண்டு நடைபெற்ற போட்டியில், ஜப்பானின் புகுசிமா அணு உலையில் ஏற்பட்டது போன்ற விபத்துக்கள் நடைபெறும் பொழுது பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்குத் தகுதியான ரோபோக்களைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆபத்தான நேரங்களில் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, வேகமாக மக்களை மீட்பதற்காக உருவாக்கப்பட்ட ரோபோக்கள் போட்டியில் பங்கேற்க வைக்கப்பட்டன.

DRC-Awardஇந்தப் போட்டி கலிபோர்னியாவில் உள்ள பொமோனா என்ற இடத்தில் நடத்தப்பட்டது. இதில் தான், தென் கொரியாவின் ‘டிஆர்சி – ஹூபோ’  (DRC-HUBO) என்ற ரோபோ, மற்ற 22 போட்டி ரோபோக்களைப் பின்னுக்குத் தள்ளிக் கடுமையான சவால்களைத் தாண்டி முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

#TamilSchoolmychoice

ஆபத்துக் காலங்களில் மனிதர்களைப் போல் சிந்திப்பது, கார் கதவுகளைத் திறந்து விடுவது, வேகமாகக் காரை ஓட்டிச் செல்வது, அறைக் கதவைத் திறப்பது, சுவர்களில் துளையிடுவது, படிகளில் இறங்கி ஓடுவது போன்ற பல வேலைகள் இந்த ரோபோ மிகச் சாதாரணமாகச் செய்து முடித்தது.

மக்களை மீட்பதற்காக மொத்தம் ஒதுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், இந்த டிஆர்சி -ஹூபோ ரோபோ 44 நிமிடங்கள் 28 வினாடிகளில் அனைத்துப் பணிகளையும் செய்து முடித்து ஆச்சரியப்படுத்தியது. இந்தப் போட்டியில் டிஆர்சி – ஹூபோ வென்றதற்காக அந்த ரோபோவை வடிவமைத்த தென் கொரிய மாணவர்கள் குழுவிற்கு 2 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டன.