Home கலை உலகம் புதுமுக இயக்குனருடன் நயன்தாரா காதலா? – சர்ச்சையைக் கிளப்பும் தம்படங்கள்!

புதுமுக இயக்குனருடன் நயன்தாரா காதலா? – சர்ச்சையைக் கிளப்பும் தம்படங்கள்!

647
0
SHARE
Ad

vigneshshivanசென்னை, ஜூன் 12 – தமிழ்ச் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகி ஜொலிக்கும் நயன்தாரா, தன் புகழுக்குச் சமமாகப் பல்வேறு சர்ச்சைகளையும் கடந்து வந்துள்ளார். சிம்புவுடன் காதல், இருவரின் அந்தரங்கப் படங்கள், அவருடன் காதல் முறிவு அதன் பின்னர் பிரபுதேவாவுடன் இரகசியத் திருமணம் எனப் பல்வேறு சர்ச்சைகள் அவரைச் சுற்றி எப்போதும் இருந்து வந்தன.

இந்நிலையில், சில காலம் எந்தவொரு காதல் சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்த நயன்தாரா, தற்போது மீண்டும் தனது காதல் அத்தியாயங்களைத் துவங்கி உள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

சிம்புவை வைத்து ‘போடா போடி’  படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் விக்னேஷ் சிவன், சில காலம் எந்தவொரு படவாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார். இந்நிலையில், ‘வேலையில்லாப் பட்டாதாரி’ படத்தில் சிறு வேடம் ஒன்றில் நடித்து இருந்தார். அதுமுதல் நடிகர் தனுஷுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் தனுஷ் அவர் கூறிய ‘நானும் ரவுடி தான்’ கதையை, நடிகர் விஜய் சேதுபதியை வைத்துத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா தான் கதாநாயகி.

#TamilSchoolmychoice

தொடக்கத்தில் இயக்குனர்-நடிகை என்ற தொழில் ரீதியான உறவு மட்டும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கு இருந்தாலும், அதன் பின்னர் இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இருவரும் அதனை மறுத்தாலும், தற்போது அத்தகைய பேச்சுகளில் கவனம் செலுத்தாமல் பொது விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொள்கின்றனர். மேலும் சர்ச்சைகளை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் பல்வேறு தம்படங்களைப் பொது ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இதில் குழப்பமான மற்றொரு விஷயம் என்னவென்றால் அவர்களுக்குள் உண்மையில் நெருக்கம் ஏற்பட்டுள்ளதா அல்லது படத்திற்கான விளம்பர உத்தியா என்பது தான். இதேபோன்று  ‘ராஜாராணி’ படத்தின் விளம்பரத்திற்காக ஆர்யா-நயன்தாராவிற்குத் திருமணம் என்று செய்திகள் அப்படக் குழுவினராலே பரப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று.