Home நாடு சசிகுமாரின் மரண விசாரணையில் நீதித் துறை தயக்கம் ஏன்? – ஹிண்ட்ராப் வேத மூர்த்தி!

சசிகுமாரின் மரண விசாரணையில் நீதித் துறை தயக்கம் ஏன்? – ஹிண்ட்ராப் வேத மூர்த்தி!

788
0
SHARE
Ad

hindraf

கோலாலம்பூர், ஜூன் 12 – சிறைச்சாலையில் சசிகுமார் மரணமடைந்து இரண்டு வாரங்களாகி விட்ட நிலையில், நீதி துறையோ, சட்டத்துறைத் தலைவரோ மரண விசாரணை நடத்துவதற்கு இன்னும் முன் வராதது குறித்து ஹிண்ட்ராப் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

தாங்கள் வெளியிட்ட அறிக்கையொன்றில் ஹிண்ட்ராப் பின்வருமாறு தெரிவித்துள்ளது:-

#TamilSchoolmychoice

“நீதி, நீதித் துறை மீதான நம்பிக்கை குறைந்து வருவதைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவதற்கும் காவலில் மரண சம்பவங்கள் போன்ற பொது மக்கள் நலன் கொண்ட வழக்குகளில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் 2014-ஆம் ஆண்டில் “ஜூசா சி (அரசாங்க முதன்மை அதிகாரிகள்)” அதிகாரிகளுடன் செஷன்ஸ் நீதிபதிகள் மரண விசாரண நீதி மன்றம் அமைக்கப்பட்டது.

கூட்டரசு நீதி மன்றத் தலைமைப் பதிவக அலுவலகத்திலிருந்து 8-ஆம் தேதி ஏப்ரல் 2014-ல் நடைமுறைகள் வெளியிடப்பட்டன. அதில் சிறைச்சாலையில் மரணம் ஏற்பட்டால் விசாரணை நடத்த வேண்டுமெனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கீழ்க்காணும்  உத்தரவுகள் , வழி காட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்:

  •  மரண விசாரணை நடத்துபவர் (செஷன்ஸ் நீதிபதி) உடலைப் பரிசோதிப்பதற்கு மரணம் நடந்த இடத்திற்குச் செல்ல வேண்டும்
  • மரணத்திற்கான காரணத்திற்கு மரணம் அடைந்தவர் எப்படி,எப்போது , எங்கு வந்தார் ?
  • செயலை செய்தவர்கள் அல்லது மரணத்தில் விடு பட்டவைகள் மீது விசாரணை நடத்துபவர் விசாரிக்க வேண்டும்.

இவை தவிர மரண விசாரணை எங்கு நடத்தப்பட வேண்டும் எனவும்  விவரிக்கப்பட்டுள்ளது.  அதில் முக்கியமான தவறுகளைக் கண்டு பிடித்தல். அல்லது தெரியாத அபாயங்களை அறிதல். விசாரணையில் உதவக் கூடிய குடும்ப உறுப்பினர்கள் பொது மக்களின் கருததுக்களை அறிதல் ,  நீதித் துறை மீதான பொது மக்களின் நம்பிக்கையை நிலை நாட்ட உதவுதல் .

மரண விசாரணைக்கான வழிகாட்டுதல்கள்:

– மரணம் நடந்த இடத்தில் உடலை விசாரணை நடத்துபவர் பார்த்துச் சோதிக்க வேண்டும் . காயம், குறிகளை ஆராய்தல் வேண்டும்.

– மரணம் அடைந்தவரின் சிறைச்சாலை கைதிகள் மற்றும் மற்ற தேவையான நபர்களிடம் விசாரணை செய்தல்;

-லாக் அப் டைரி பிரதிகள் ,மரணம் அடைந்தவரின் நடமாட்ட ஆவணங்களை சேகரித்தல் 

-அனைத்து த்தேடல்களும் குறிக்கப்பட வேண்டும். அவை பின்னர் மரண விசாரணையில் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த வழி முறைகள் இருந்தாலும் கூட மரண நீதி மன்றமாகச் செயல்படும் செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து இதுவரை மவுனம் தான் உள்ளது .

நீதித் துறை தனது சொந்த உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றாதது பொது மக்களிடையே எதிரிடையான தோற்றத்தை புரிதலை ஏற்படுத்தி விடும்.

சசிகுமாரின் மரணம் மீது நீதித் துறையோ , சட்டத்துறை அலுவலகமோ (மரண விசாரணைக்கு உத்தரவிட அவற்றுக்குத் தனித் தனி அதிகாரங்கள் உள்ளன) சொந்தமாகவோ அதிகாரத்தின் மூலமோ எந்தவொரு நடவடிக்கையையும் மேற் கொள்ளாதது ஹிண்ட்ராப்பை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

fhghசசி குமார் ஆதரவற்றவர் என்பதற்காகக் அவ்வாறு செய்யப்பட்டதா?அவரது அகால மரணம் குறித்து நீதியை நிலை நாட்ட யாரும் இல்லையென்பதற்காக இவ்வாறு நடந்துள்ளதா ? இப்பையனின் மீது பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க விரைவாகச் செயல்பட்ட நீதி தற்போது மரண விசாரணை நடத்துவதற்கு மந்தமான போக்கைக் கடைப்பிடிக்கிறது.

சசி குமாரின் மரணம் குறித்து மாறுபட்ட வெவ்வேறான, உறுதிப் படுத்தாத தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. ஆகவே மரண விசாரணை உடனடியாக நடத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளது .

சசி குமார் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது. மரணத்தில் மூன்றாம் தரப்பு தொடர்பு அல்லது அதைத் தடுக்கத் தவறியதும் நிகழ்ந்திருக்கலாம்.

ஆகவே நீதி மன்றம் மரண விசாரணையைத் தொடக்கியிருக்க வேண்டும். பையனின் பாட்டியின் சார்பாக நாங்கள் சட்டத் துறைத் தலைவர் அலுவகத்திற்குக் கடிதம் அனுப்பி விட்டோம். ஆனால், இது நாள் வரை அக்கடிதத்திற்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை.

காவல் தடுப்புகளில் நிகழும் மரணம் பொது அக்கறை சம்பந்தப்பட்டதாகும். ஆகவே நீதி துறையும் சட்ட அலுவலகமும் உடனடியாக மரண விசாரணையைத் தொடக்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இதனை இனியும் இழுத்தடித்துச் செல்வது நல்லதாக அமையாது. சுயேட்சை நீதியின் மீது பொது மக்களின் நம்பிக்கை மேலும் சரிந்து வருவதால் இப்பிரச்னையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”

-இவ்வாறு ஹிண்ட்ராப் சார்பாக அதன் தலைவர் பொ.வேதமூர்த்தி தெரிவித்தார்.