கோலாலம்பூர், ஜூன் 12 – இனப்படுகொலையை நிறுத்தவில்லை என்றால், ஆசியானில் இருந்து மியான்மரை வெளியேற்றுவது நல்லது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
ஆசியான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மகாதீர் கேட்டுக்கொண்டுள்ளார்.
“மனிதாபிமான அடிப்படையில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை மியான்மர் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து இனப்படுகொலைகளை செய்து வருமானால், அதை உடனடியாக ஆசியானில் இருந்து வெளியேற்ற வேண்டும்” என இன்று நடைபெற்ற ‘ரோஹின்யாவின் பரிதாபநிலை, மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள்’ என்ற தலைப்பிலான அனைத்துலக மாநாட்டில் மகாதீர் தெரிவித்துள்ளார்.