Home தொழில் நுட்பம் முகநூலில் ஆபாசக் காணொளியைப் பரப்பும் வைரஸ்!

முகநூலில் ஆபாசக் காணொளியைப் பரப்பும் வைரஸ்!

681
0
SHARE
Ad

faceபுதுடில்லி, ஜூன் 13-சமூக வளைதளமான முகநூலில் ஆபாசப் புகைப் படங்கள், காணொளிகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பரப்பும் வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது.

ஆக்ரா சுழியம் குற்றவியல்  காவல்துறை  (cyber crime police) அதிகாரி நிதின் கஸானா இந்த வைரஸ் குறித்துக் கூறியது என்னவெனில்:

“இந்த வைரஸ் கிலிம் மால்வேர் பிரிவைச் சேர்ந்தவை. இந்த வகையான வைரஸ் உலகம் முழுவதும் குறுஞ்செய்தி வடிவில் வேகமாகப் பரவி வருகிறது.

#TamilSchoolmychoice

எப்படி என்றால்,  watch urgent,because it is your video என்று குறுஞ்செய்தி வரும். இதனை யார் கிளிக் செய்கிறார்களோ  அவர்களின் இன்பாக்ஸ்க்கு ஸ்பேமாக ஆபாசப் புகைப்படங்கள், காணொளிகள் வரும்.

மேலும், இது அவர்களின் நண்பர்கள் வட்டத்துக்கு நாமே அனுப்புவது போன்று ஆபாசப் புகைப் படங்களையும் காணொளிகளையும் அனுப்பும்.

ow.ly என்ற லிங்க் மூலம் இந்தக் குறுஞ்செய்தி பரவும்.கணினிப் பயன்பாட்டாளர்களுக்கும் கைபேசிப் பயன்பாட்டாளர்களுக்கும் இந்த வைரஸ் பல்வேறு ஆஃபர்களை வழங்கும். இறுதியில் இதனைப் பதிவிறக்கம் செய்ய விருப்பமா என்று கேட்கும்.

இறுதியில் பல்வேறு ஆபாசங்களைப் பல்வேறு வடிவில் அனுப்பும். இதன் பின்னர் நமது இன்பாக்ஸிலிருந்து நமது சுற்று வட்டத்தில் நண்பர்களாக உள்ள அனைவருக்கும் ஆபாசங்களை அனுப்பும். எனவே, கவனமாக இருக்கவும்” என எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள முகநூல் தலையகத்திற்குச் சுழியம் குற்றவியல் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முகநூல் நிர்வாகம் விரைவில் பதிலளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.