Home கலை உலகம் தனுஷ் படத்திற்காக ஜேம்ஸ்பாண்ட் பட சண்டைப் பயிற்சியாளர் சென்னை சென்றுள்ளார்!

தனுஷ் படத்திற்காக ஜேம்ஸ்பாண்ட் பட சண்டைப் பயிற்சியாளர் சென்னை சென்றுள்ளார்!

614
0
SHARE
Ad

dhanush34343-600-jpgசென்னை, ஜூன் 13 – தனுஷ் கூட்டணியில் உருவாகவிருக்கும் அடுத்தப்படத்திற்கான வேலையைத் தொடங்கிவிட்டார் இயக்குநர் பிரபுசாலமன். முதல் கட்டமாக சண்டைப்பயிற்சிக்காக ஹாலிவுட் படங்களில் வேலை பார்த்த ‘ரோஜர் யுவன்’ சென்னைக்குச் சென்றுள்ளார்.

இவர் பிரபல ‘ஜேம்ஸ் பாண்ட்’ படமான ‘ஸ்கைஃபால்’ மற்றும் ப்ளேடு உள்ளிட்ட படங்களில் வேலை பார்த்தவர். இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கின்றார்.

இமான் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ரயில் பயணத்தில் நடக்கும் காதல் கதையாக உருவாகவிருக்கிறதாம் திரைக்கதை. ரயிலில் ஆபத்தான சண்டைக்காட்சிகள் எல்லாம் படமாக்கவிருக்கிறார்களாம்.

#TamilSchoolmychoice

தற்பொழுது, தனுஷ் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் சமந்தா, எமிஜாக்ஸன் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தப்படத்தை முடித்துவிட்டு பிரபுசாலமன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.