Home நாடு சபா அதிகாரப்பூர்வமாக மலேசியாவிற்குச் சொந்தமானது – வரலாற்று ஆர்வலர்கள் கருத்து

சபா அதிகாரப்பூர்வமாக மலேசியாவிற்குச் சொந்தமானது – வரலாற்று ஆர்வலர்கள் கருத்து

878
0
SHARE
Ad

Sabah-map-Featureகோத்தாகினபாலு, மார்ச் 7 – சபா மாநிலத்தை சுலு சுல்தான் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் சொந்தங்கொண்டாடி வரும் இவ்வேளையில் வரலாற்று ஆர்வலர்கள், சபா மாநிலம், 1962 ஆம் ஆண்டு கோபோல்ட் ஆணையத்தால் நடத்தப்பட்ட பொதுஜன வாக்கெடுப்பை அடிப்படையாகக்கொண்டு மலேசியாவை சேர்ந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதை சுலு சுல்தான் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் சொந்தங் கொண்டாடுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி, மலேசியா சபா பல்கலைகழகத்தைச் சேர்ந்த சமூக அறிவியல் மற்றும் வரலாற்றுத் துறைத்  தலைவர் மொஸ்லி டர்சாட் கூறுகையில், சபா மாநிலம், இன்றளவும் மலேசியாவின் எல்லைக்குட்பட்ட பகுதி என்று ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை வரலாற்று சான்றுகள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன

#TamilSchoolmychoice

மேலும், 1963 ஆம் ஆண்டு வரை, சபா மாநிலம் மலேசியாவுடன் இணைவதற்கு முன்பு புருணை சுல்தானின் கட்டுப்பாட்டில் வடக்கு போர்னியோ நிறுவனத்தின் வசம் இருந்துள்ளது.

பிறகு சபா, மலேசியாவுடன் இணைவது தொடர்பாக கோபோல்ட்  ஆணையத்தால் (சபா, சரவாக்) மக்களிடையே நடத்தப்பட்ட பொதுமக்கள் வாக்கெடுப்பின்படி, 80 % மக்களின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிட்டிஷ் அரசின் அனுமதியுடன் சபா, சரவாக், மலாயா, புருணை மற்றும் சிங்கப்பூர் ஆகிய பகுதிகள் மலேசியாவுடன் இணைந்தன.

எனவே 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி, அதாவது மலேசியா சுதந்திரம் அடைந்த அதே வருடத்தில் செப்டம்பர் 16 ஆம் தேதி, சபா அதிகாரப்பூர்வமாக மலேசியாவுடன் இணைந்தது என்று மொஸ்லி நேற்று பெர்னாமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் இதுபற்றி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத்துறை அமைச்சர், டத்தோ ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் “சபா அதிகாரப்பூர்வமாக மலேசியாவுடன் சேர்ந்தது என்று உலகளாவிய சட்டம் சொல்கிறது. எனவே அதை உரிமை கொண்டாட அவர்களுக்கு (சுலு சுல்தான் ) உரிமை கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

இவர் கூறியுள்ள இக்கருத்துக்கு மொஸ்லியும் ஆதரித்துள்ளார்.இதுதவிர, மலேசியா பெர்லிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ரமலாஹ் ஆதமும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை, வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட மிகத் துல்லியமான தகவல் என்று தெரிவித்துள்ளார்.

இது பற்றி விரிவான வரலாற்றுத் தகவல் செல்லியல்.காம் இல் நேற்று ” யார் இந்த சுலு சுல்தான் ” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.