Home இந்தியா ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்: காங்கிரஸ் அறிவிப்பு

ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்: காங்கிரஸ் அறிவிப்பு

699
0
SHARE
Ad

ragul-gandhiபுதுடெல்லி, மார்ச். 7-  பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் வியூகங்கள் வகுத்து வருகிறது. தேர்தல் பொறுப்பாளராக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் ஒற்றர்களை நியமித்து வெற்றி பெறும் வாய்ப்புள்ள வேட்பாளரை ராகுல் காந்தி தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படக்கூடும் என அக்கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள்.
பிரதமர் பதவிக்கு அவர் பொருத்தமானவர் என அவர்கள் கருதுகிறார்கள்.

கட்சியின் செய்தி தொடர்பாளர் சந்திப் தீட்சித் கூறும்போது, பிரதமர் பதவி குறித்து தன்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ஆனால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதுகுறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல்காந்தி கட்சியின் தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பார்.

#TamilSchoolmychoice

தேர்தலுக்கு பிறகு கட்சியின் நாடாளுமன்ற குழுவினர் கட்சி தலைமை (பிரதமர்) வேட்பாளராக அவரை அறிவிப்பர் என்றார். பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி பொருத்தமானவர் என்றும் அவர் கூறினார்.

ஆனால் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசும்போது, பிரதமர் ஆவது எனது விருப்பம் இல்லை. கட்சியை வலுப்படுத்தவே விரும்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

ராகுல்காந்தியின் இந்த பேச்சை பாரதீய ஜனதா கிண்டல் செய்து உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறும்போது, வர இருக்கும் பாராளுமன்ற பொது தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். இதை அறிந்தே பிரதமராகும் ஆசை தனக்கு இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார் என்றார்.