Home கலை உலகம் பலருக்குப் பொறாமையைக் கிளப்பும் நயன்தாரா- விக்னேஷ்சிவன் தம்படம்!

பலருக்குப் பொறாமையைக் கிளப்பும் நயன்தாரா- விக்னேஷ்சிவன் தம்படம்!

814
0
SHARE
Ad

சென்னை,ஜுன்13- நயன்தாரா ஒரு காதல் பறவை என்பதை நாடே அறியும்..நாளொரு நடிப்பு பொழுதொரு காதல் என்பது அவரது தாரக மந்திரமாக இருக்கும் போலிருக்கிறது.

சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என்று தொடர்ச்சியாகப் பலருடன் கிசுசகிசுக்கப்பட்ட நயன்தாரா, இப்போது ‘போடா  போடி’ இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கிசுகிசுக்கப்படுகிறார்.

விக்னேஷ் சிவன் ‘போடா போடி’ என்ற ஒரேயொரு படத்தைத் தான் இதுவரை இயக்கியிருக்கிறார். இப்போது, தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும்’ நானும் ரவுடிதான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

#TamilSchoolmychoice

அதற்குள் நயன்தாராவை வளைத்துவிட்டார். பிடித்தாலும் பிடித்தார்; நல்ல புளியங்கொம்பாய்ப் பார்த்துப் பிடித்துவிட்டார் என்று சினிமாத்துறையினர் புலம்பித் திரிகின்றனர்.

பலருக்கு வயிற்றிலிருந்தும் காதிலிருந்தும் குபுகுபுவெனப் புகை பீறிட்டு வருகிறது.

கீழே உள்ள புகைப்படத்தைப் பாருங்கள்; உங்களுக்கும் தன்னாலே புகை வரும்.

nayanthaaraசில வாரங்கள் முன்பு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிப்பதாகவும், கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும் வதந்தி கிளம்பியது. அதனை இருவருமே மறுத்தனர். விக்னேஷ் சிவன் ஒருபடி மேலே சென்று, இதனால் என்னுடைய தொழில் பாதிக்கப்படுகிறது என்று இணையத்தில் வருத்தப்பட்டார்.

இந்நிலையில்,’ நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பு முடிந்த அன்று விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கட்டிப்பிடித்தபடி தம்படம் எடுத்து வெளியிட்டனர்.

முதல் படத்தில் வேறு தொழில்நுட்பக் கலைஞர்களும் உடன் இருந்தனர். அடுத்ததாக வெளியிட்ட தம்படத்தில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் மட்டும் காற்று கூட புக முடியாத நெருக்கத்தில் அப்படியொரு பிணைப்பில் இருக்கிறார்கள் பாருங்கள்.

தம்படத்தைப் பார்த்தால் இது வதந்தி மாதிரியோ, வதந்திக்காக விக்னேஷ் சிவன் வருந்துவது மாதிரியோ தெரியவில்லையே?!