இது குறித்து பாஸ்மா (Persatuan Ummah Sejahtera Malaysia) தலைவர் டத்தோ பாஹ்ரோல்ராசி ஜவாவி கூறுகையில், பக்காத்தானில் பாஸ் எந்த இடத்தில் இருந்ததோ அதை நிரப்பும் வகையில் இந்தப் புதிய கட்சி செயல்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், பக்காத்தான் ஆதரவு அரசு சாரா அமைப்புகளை ஒன்றுகூட்டிய பிறகு புதிய கட்சிப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய கட்சி இதற்கு முன்பு பாஸ் கட்சி போராடிய வழியில் தொடரும் என்றும், இது ஒரு திறந்த கட்சி எல்லா இனத்தவர்களும் இதில் உறுப்பினராகலாம் என்றும் பாஹ்ரோல்ராசி தெரிவித்துள்ளார்.