Home நாடு அரசியல்வாதிகளே மக்களையும் கொஞ்சம் கவனியுங்கள் – டோனி ஆதங்கம்

அரசியல்வாதிகளே மக்களையும் கொஞ்சம் கவனியுங்கள் – டோனி ஆதங்கம்

546
0
SHARE
Ad

Tony Ferகோலாலம்பூர், ஜூன் 13 – மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத மலேசிய அரசியல் தலைவர்கள் மீது ஏர் ஆசியா நிறுவனத் தலைவர்  டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் வாயிலாகக் கடந்த திங்கட்கிழமை தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ள அவர், அரசாங்கமும், எதிர்க்கட்சியினரும் மதங்களின் மீதும், இனங்களின் மீதும் தான் அதிக அளவு நேரத்தைச் செலவிடுகின்றனர். அவர்கள் உண்மையான மலேசியக் கட்சிகளாக இருந்தால் மக்களின் மீது தான் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று டோனி குறிப்பிட்டுள்ளார்.

“நல்ல கல்வி, நல்ல மருத்துவ வசதி, அனைவருக்கும் சமமான வசதிவாய்ப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதாரம், சுத்தமான அரசாங்கம், ஒளிவுமறைவற்ற தலைமைத்துவம்” என்று தனது மற்றொரு பதிவில் டோனி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“நாமெல்லாம் மலேசியர்கள், நாம் மற்றவர்களின் கலாச்சாரங்களையும், மதங்களையும் மதிக்கின்றோம். ஆனால் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இணைந்து பணியாற்ற வேண்டும். அதற்கு உதாரணம் ஏர் ஆசியா” என்று டோனி தெரிவித்துள்ளார்.