Home கலை உலகம் ‘பாபநாசம்’ படத்தின் இரண்டாம் முன்னோட்டம் வெளியானது!

‘பாபநாசம்’ படத்தின் இரண்டாம் முன்னோட்டம் வெளியானது!

629
0
SHARE
Ad

kmalசென்னை, ஜூன் 14 – ‘உத்தம வில்லன்’ திரைப்படத்திற்குப் பிறகு கமலஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பாபநாசம்’ படத்தின் இரண்டாம் முன்னோட்டம் நேற்று முன்தினம் வெளியானது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர்  மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ‘திரிஷ்யம்’ படத்தின் மறு உருவாக்கம் தான் இந்தப் ‘பாபநாசம்’. இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

‘பாபநாசம்’ படம் ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தாமதமானதால் வெளியீட்டிலும் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால், இப்படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கமலுடன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதமி இணைந்துள்ள இப்படத்தில், இவர்களுடன்  சார்லி, கலாபவன் மணி, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்கியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தொடர்ச்சியாகக் கமல் படங்களுக்கு இசை அமைத்து வரும் ஜிப்ரான் இந்தப் படத்திற்கும் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே பாபநாசம் திரைப்படத்தின் முதல் முன்னோட்டம் கடந்த மாதம் வெளியானது. எனினும், படத்தின் விறுவிறுப்பான காட்சிகள் அதில் இடம்பெறாததால் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து படக் குழு படத்தின் முக்கியக் காட்சிகள் இடம்பெறும் முன்னோட்டத்தை வெளியிட்டதால் ரசிகர்கள் மத்தியில் அதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பாபநாசம் படத்தின் இரண்டாம் முன்னோட்டத்தைக் கீழே காண்க: