Home நாடு 89 ஆண்டு கால மூவார் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி இடம் மாற்றம் – டாக்டர் சுப்ரா...

89 ஆண்டு கால மூவார் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி இடம் மாற்றம் – டாக்டர் சுப்ரா அறிவிப்பு

562
0
SHARE
Ad

சிகாமாட், ஜூன் 14 – சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் தீவிர முயற்சியில் அத்தொகுதியில் மூன்றாவது நகரத்து தமிழ்ப்பள்ளியாக மூவார் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாற்றம் காணவுள்ளது.

Subra-Muar Rive Est-Tamil School relocation

இந்த மூவார் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி கடந்த 89 ஆண்டு காலமாக தோட்டப்புறத்தில் செயல்பட்டு வந்தது.

#TamilSchoolmychoice

பூலோ கசாப் நகரில் தாமான் மாவார் பகுதியில் பெற்றுள்ள 4 ஏக்கர் நிலத்தில் இந்தச் சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி இடமாற்றம் பெறவுள்ளது.

Subra-Segamat-Muar River-Tamil school-relocation

கடந்த 1926ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தச் சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தற்பொழுது ஏறக்குறைய 58 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 4 ஆண்டு காலமாக யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சியைப் பதிவு செய்த வேளையில், 2014ஆம் ஆண்டு குழுவகப் பள்ளியாகவும் இப்பள்ளி அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“இத்தகைய நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் தரம் வாய்ந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில், நகரத்துக்குள் இப்பள்ளி அமைக்கப்பட்டால் இவ்வட்டாரத்தில் வாழும் இந்தியர்களுக்கு உதவியாகவும், இன்னும் குறுகிய காலக்கட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் பயில்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. அதனைக் கருதில் கொண்டே இத்திட்டம் அமலாக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டது” என அமைச்சர் டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Subra-Muar River-Tamil School-relocation-2

இதற்கிடையில், பூலோ கசாப் பட்டணத்தின் தாமான் மாவார் பகுதியில் புதிய தமிழ்ப்பள்ளி கட்ட அடையாளம் கண்டுள்ள நிலத்தை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியமுடன், சிகாமாட் மாவட்ட அதிகாரி டத்தோ முகமட் இசா அவர்கள் மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளி தலைமையாசிரியர், இதர அரசாங்க அதிகாரிகளும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கூடிய விரைவில் அந்நிலத்தில் கொள்முதல் வேலைகள் தீர்வான பிறகு, இப்பள்ளிக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சுப்ரா அறிவித்தார்.

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் எனும் முறையில் டாக்டர் சுப்ரா அந்தத் தொகுதியில் இந்தியர்கள் நலன் கருதிப் பல மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.

அதன் அடிப்படையில், போட்ரோஸ் தோட்டத்தில் செயல்பட்டு வந்த தமிழ்ப்பள்ளி தற்பொழுது கிம்மாஸ் பாரு பட்டணத்திற்கு அருகில் இரு மாடி கட்டடம் பெற்றுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற வேளையில், நாகப்பா தோட்டத்தில் செயல்பட்டு வந்த தமிழ்ப்பள்ளி சமீபத்தில் ஜெமெந்தா பட்டணத்தில் திறப்பு விழாக் கண்டு இரு மாடி கட்டடங்களுடன் கூடுதலாக ஒரு மண்டபமும் பெற்றுச் செயல்பட்டு வருகின்றது.

அவ்வகையில், சிகாமாட் தொகுதியில் உள்ள 6 தமிழ்ப்பள்ளிகளுள் 4 தமிழ்ப்பள்ளிகள் பட்டணப் பள்ளிகளாகச் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் சாதனை உலகளவில் பேசப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வரும் வேளையில் தமிழ்ப்பள்ளிகளுக்கான தம்முடைய சேவைகள் இத்தோடு நின்று விடாமல் அதிகரிப்பதுடன் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் இதன் தொடர்பில் டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.

தமிழ்ப்பள்ளிகளுக்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வருவதோடு, அவற்றின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் தம்முடைய பங்கு எப்பொழுதும் இருக்கும் என்றும் டாக்டர் சுப்ரா மேலும் தெரிவித்தார்.