அதிகத் திறன் வாய்ந்த 20-க்கும் மேற்பட்ட சுருள்படக் கருவிகள் (camera) மூலம் படம் பிடித்து இந்தயோகா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.
இந்தியா கேட் முதல் விஜய் சவுக் வரையிலான ராஜபாதை முழுவதையும் படம் பிடிக்கும் வகையில் சுருள்படக் கருவிகள் அமைக்கப்படுகின்றன.
மேலும், பருந்துப் பார்வையில் (top view) படம் பிடிக்கும் வகையில் இந்தியா நுழைவாயில்(india gate) மீது இரண்டு சுருள் படக் கருவியும், ஹைட்ராலிக் பளுதூக்கி (crane) மீது ஒரு சுருள்படக் கருவியும் பொருத்தப்படுகின்றன.
தூர்தர்ஷன் போன்று அகில இந்திய வானொலி நிலையமும் இந்நிகழ்ச்சியை ஒலிபரப்புச் செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.