Home இந்தியா லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா சுவராஜ் ராஜினாமா செய்ய அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்து!

லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா சுவராஜ் ராஜினாமா செய்ய அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்து!

384
0
SHARE
Ad

14062015_susmaபுதுடெல்லி, ஜூன் 15 – ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பிரச்சினையை தீவிரமாக எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள், சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கூறுகையில், “லலித் மோடி விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்திய அமலாக்கத்துறை மணு அனுப்பியுள்ளது.

#TamilSchoolmychoice

அப்படிப்பட்ட ஒரு நபருக்கு, இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுபினர் மூலம் சுஷ்மா சுவராஜ் உதவியிருப்பது முக்கியமான பிரச்சினை’ என்றார்.

லலித் மோடிக்கு, சுஷ்மா சுவராஜ் உதவுவார் என எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியுள்ள அவர், தார்மீக அடிப்படையில் சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரம் பிரதமரின் ஒப்புதலின் பேரில்தான் நடந்ததா? என்பதை மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் திக்விஜய் சிங் கூறினார்.

லலித் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் உதவியிருப்பது முக்கியமான பிரச்சினை என்று கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா, இது குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் விளக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க வேண்டியது பிரதமரின் கடமை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் கூறியுள்ளது. சுஷ்மா சுவராஜ் பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை என ஆம் ஆத்மியும் கூறியுள்ளது.

இதற்கிடையே லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியிடம், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ‘இது குறித்து விரிவான தகவல் எதுவும் எனக்கு தெரியவில்லை. இது தொடர்பான விசாரணை அறிக்கை வந்த பிறகு, நாடாளுமன்றத்தில் இது குறித்து பிரச்சினை எழுப்பப்படும்.

இந்த விவகாரத்தில் உண்மை நிலையை நாங்கள் அறிய விரும்புகிறோம். எனவே இது தொடர்பான விசாரணை அறிக்கை வந்த பிறகு கருத்து தெரிவிப்பதே சிறந்தது’ என்று கூறினார்.