“இந்த வழக்கு மஇகா குடும்பம் சம்பந்தப்பட்டது. நியாயத்தையும், நீதியையும் நிலைநாட்டுவதற்காகவே இந்த வழக்கில் மூன்றாம் தரப்பாக நான் தலையிட்டேன். அதற்காக, ஒருவருக்கொருவர் செலவுத் தொகையை கேட்பது முறையற்றது என்பதால் நான் செலவுத் தொகை எதையும் கோரவில்லை” என இந்த வழக்கு தொடர்பாக ‘செல்லியல்’ தொடர்பு கொண்டபோது டத்தோ சரவணன் தெரிவித்தார்.
மஇகா – சங்கப்பதிவகம் இடையிலான வழக்கில், இன்று வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பில், சங்கங்களின் சட்டம், பிரிவு 16 (1)-க்கு உட்பட்டு தான், சங்கங்களின் பதிவிலாகா செயல்பட்டுள்ளதாகவும், அது தனது அதிகாரத்தை எவ்வகையிலும் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.