Home கலை உலகம் ஏ.ஆர்.ரகுமானைத் தொடர்ந்து டுவிட்டரில் 10 லட்சம் இரசிகர்களைப் பெற்று அனிருத் சாதனை!

ஏ.ஆர்.ரகுமானைத் தொடர்ந்து டுவிட்டரில் 10 லட்சம் இரசிகர்களைப் பெற்று அனிருத் சாதனை!

568
0
SHARE
Ad

Untitled-3சென்னை, ஜூன் 16 – தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அந்தப் படத்தில் இவர் இசையமைத்த ‘கொலவெறி’ பாடல் உலகமெங்கும் பிரபலமானது. அதைத் தொடர்ந்து அனிருத் இசையமைத்த அனைத்துப் பாடல்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்றன.

அதன்பிறகு, பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பும் இவரைத் தானாகவே தேடி வந்தது. இளம் வயதிலேயே மிகப்பெரிய இடத்தை அடைந்துவிட்ட அனிருத்,

சமூக வலைதளமான டுவிட்டரில், தன் பெயரில் சொந்தமாகப் பக்கம் ஒன்றை நிறுவி, அதில் தான் இசையமைக்கும் படம் குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

#TamilSchoolmychoice

இவருடைய பக்கத்தில் பல்வேறு ரசிகர்கள் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது, இவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேரைத் தொட்டுள்ளது.

டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையில் 10 லட்சம் பேரைத்தொட்ட இசையமைப்பாளர்களில் இரண்டாவது இடத்தை அனிருத் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக இச்சாதனையைப் படைத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானைத் தற்போது 78 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.