Home நாடு டாக்டர் சுப்ரா, டத்தோ சரவணன் உட்பட 15 பேர் இடைநீக்கம் – பழனிவேல் அறிவிப்பு

டாக்டர் சுப்ரா, டத்தோ சரவணன் உட்பட 15 பேர் இடைநீக்கம் – பழனிவேல் அறிவிப்பு

912
0
SHARE
Ad

g-palanivel_mic-300x198கோலாலம்பூர், ஜூன் 16 – மஇகா தலைமையகத்தில் சட்டத்திற்குப் புறம்பாகக் கூட்டம் நடத்தியதாகக் கூறி அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இன்று, தேசியத் துணைத்தலைவர்  டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் உட்பட 15 பேரை, தற்காலிக இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்.

இது குறித்துப் பழனிவேல் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“மஇகா தலைமையகத்தில் நேற்று மதியம் 12.30 மணியளவில் 2009 மத்திய செயலவைச் சட்டத்திற்குப் புறம்பாகக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதைப் பற்றி முன்பே எனது நேற்றைய பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.”

#TamilSchoolmychoice

“இடைக்கால மத்திய செயலவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அவசரக்  கூட்டத்தை இரத்து செய்யுமாறு, நேற்று 15 ஜூன் அன்று, “2009-2013-ம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை உறுப்பினர்களால்  நோட்டீஸ் அனுப்பப்பட்டது.”

“சட்டத்திற்குப் புறம்பான இடைக்கால மத்திய செயலவைக் கூட்டத்தை நிறுத்தி, இரத்து செய்யப்பட்ட நோட்டீஸை எனக்கு அனுப்புமாறு, நேற்று 15 ஜூன் 2015 அன்று, அனைத்து மத்திய செயலவை உறுப்பினர்கள் மற்றும் மற்ற தலைவர்களுக்கு தகவல் அனுப்பட்டது. ஆனால் எனது அறிக்கையையும் மீறி, சம்பந்தப்பட்டவர்கள் கூட்டத்தை இரத்து செய்யவில்லை”

“எனவே, மலேசிய இந்திய காங்கிரஸின் விதிமுறைகளுக்கு மாறாகச் சம்பந்தப்பட்டவர்கள் நடந்துள்ளனர். எனவே மலேசிய இந்தியக் காங்கிரசின் தேசியத் தலைவரான எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, மஇகா சட்டப்பிரிவு 61.1-ன் கீழ் கீழ்காணும் உறுப்பினர்களை 12 மாதங்கள் இடைநீக்கம் செய்கிறேன். இந்த இடைநீக்கம் உடனடியாக அமலுக்கு வருகின்றது”

அதன் படி இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் பெயர்கள் பின்வருமாறு:-

டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்

டத்தோ எம். சரவணன்

டத்தோஸ்ரீ எஸ்.கே தேவமணி

திரு. என். ரவிசந்திரன்

டத்தோ ஆர். கணேசன்

டத்தோ எம். தேவேந்திரன்

டத்தோ கேஆர்ஏ நாயுடு

டத்தோ வி.எம். பஞ்மூர்த்தி

திரு.பி.மணிவாசகம்

திரு.எஸ்.ஆனந்தன்

திரு.எம். மதுரைவீரன்

டத்தோ எம்.அசோஜன்

திரு.பி.சண்முகம்

திருமதி மோகனா முனியாண்டி

கே.ஆர். பார்த்திபன்

இவர்களைத் தவிர சட்டத்திற்குப் புறம்பான அந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் சிலர், ஏற்கனவே என்னால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த இடைநீக்கம் தொடர்கிறது.

இடைநீக்கக் கடிதங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.