Home உலகம் மெக்சிகோவில் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்து நீதிமன்றம் தீர்ப்பு!

மெக்சிகோவில் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்து நீதிமன்றம் தீர்ப்பு!

647
0
SHARE
Ad

28082-72561மெக்சிகோ, ஜூன் 16 -மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓரினச்சேர்க்கைத் திருமணம் தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றம் எவ்வித ஒப்புதலும் தராத நிலையில், இத்திருமணத்திற்குத் தடை விதிப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன் மூலம் அந்நாட்டில் ஓரினச்சேர்க்கைத் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டில் வழக்கறிஞராக உள்ள எஸ்டெபேனியா வேலா கூறுகையில்,

#TamilSchoolmychoice

“ஓரினச்சேர்க்கைத் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. இனவிருத்திக்காகவே ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வதாகச் சட்டம் சொல்லிவந்தது.”

“ஆனால் இதை ஒதுக்கித்தள்ளிய நீதிமன்றம் திருமணம் என்பது இரு நபர்களுக்கு இடையே தான் என அதிரடியாகக் கூறியுள்ளது” என்றார் அவர்.