Home உலகம் ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வை தமிழில் எழுத துபாய் அரசு அனுமதி!

ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வை தமிழில் எழுத துபாய் அரசு அனுமதி!

1705
0
SHARE
Ad

traffic-jam-in-dubai-604x364துபாய், ஜூன் 16 – துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு நடத்தப்படும் 30 நிமிடத் தேர்வில் தமிழ், இந்தி உட்பட ஏழு மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனை துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வாகனங்களை விதிமுறைகளின் படி ஓட்டிக் காட்டினால் மட்டும் போதாது. அந்நாட்டின் சாலை மற்றும் போக்குவரத்துக் கழகம் நடத்தும் கணினித் தேர்விலும் தேர்ச்சி பெறவேண்டும். அப்படி நடத்தப்படும் கணினித் தேர்வு இதுவரை ஆங்கிலம், உருது, அரபி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் துபாயில் நாளுக்குநாள் இந்தியர்களின் எண்ணிக்கை பெருகி வருவதாலும், ஆங்கிலம் மற்றும் உருது தெரியாத இந்தியர்கள் பலர் இதனால் சிரமத்திற்கு ஆளாவதும் அந்நாட்டு அரசிற்கு தெரிய வந்தது.

இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வர நினைத்த துபாய் அரசாங்கம், புதிதாக 7 மொழிகளை அந்நாட்டு போக்குவரத்துக் கழகம் நடத்தும் தேர்வில் சேர்க்க முடிவு செய்தது. இதன்படி, வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ், இந்தி, மலையாளம், பெங்காலி, சைனீஸ், ரஷ்யன், பெர்ஷியன் ஆகிய 7 மொழிகளில் ஓட்டுநர் உரிமம் பெற தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

துபாய் அரசின் இந்த அறிவிப்பினால் அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.