Home நாடு “நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி” – ஜோகூர் இளவரசருக்கு நஸ்ரி பதிலடி

“நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி” – ஜோகூர் இளவரசருக்கு நஸ்ரி பதிலடி

600
0
SHARE
Ad

nazri_aziz__c221353_111127_970கோலாலம்பூர், ஜூன் 16 – தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், ஆனால் ஜோகூர் இளவரசரின் நிலை அப்படி இல்லை என்றும் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு தலைவராக இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், ஜோகூர் மக்களின் சார்பிலும், மலேசியர்களின் சார்பிலும் எப்படிக் குரல் கொடுக்கின்றாரோ அப்படித் தான், தானும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகவும் நஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால் எங்களுக்குள் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன். ஒருவேளை நான் சரியாக எனது கடமைகளைச் செய்யவில்லை என்றால், மக்கள் எனக்குத் தண்டனை வழங்குவார்கள்” என்றும் நஸ்ரி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் நீதிமன்றத்தில் அவர்களை நேருக்கு நேர் பார்த்து நிற்க வேண்டும் என்றும், 5 முறை தான் அந்த நீதிமன்றத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளதாகவும் நஸ்ரி தெரிவித்துள்ளார்.

ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலுக்கு (படம்) எதிராக நஸ்ரி அசிஸ், “ஒதுங்கியிருங்கள்! இல்லாவிட்டால் நாங்கள் பதிலடி தருவோம்” என்ற தொனியில் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, அனைவரையும் கட்டுப்படுத்த நஸ்ரி ஒன்றும் கடவுள் இல்லை என்று ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் பதிலடி கொடுத்துள்ளார்.