Home இந்தியா இந்தியப் போர் விமானம் விழுந்து நொறுங்கியது! 

இந்தியப் போர் விமானம் விழுந்து நொறுங்கியது! 

570
0
SHARE
Ad

03-1433337204-jet-crash66அலகாபாத்,ஜூன் 16- இந்திய விமானத்திற்கு இது சோதனைக் காலம் போலும்.

உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டம், பம்ராலி என்ற பகுதியிலிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாக்குவார் ரக போர் விமானம் இரண்டு விமானிகளுடன் வழக்கமான பயிற்சிக்காகப் புறப்பட்டுச் சென்றது.

சக்கா என்ற பகுதியில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குக்கு அருகே வந்த போது விமானம் திடீரெனத் தரையில் விழுந்து நொறுங்கியது.

#TamilSchoolmychoice

விமானம் கீழே விழுவதை உணர்ந்த 2 விமானிகளும் பாராசூட் மூலமாகக் குதித்து தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

விமானம் விழுந்ததில்  இந்திய உணவுக்கழகத்தின் சுற்றுச் சுவரில் விரிசல் ஏற்பட்டு, அந்தப் பகுதியில் தீ பிடித்து எரிந்தது.

உடனே தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்