Home கலை உலகம்  நடிகர் சங்கப் பிரச்சனையின் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது- சரத்குமார் சாடல்! 

 நடிகர் சங்கப் பிரச்சனையின் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது- சரத்குமார் சாடல்! 

590
0
SHARE
Ad

sarathkumar madurai 550 1(2)மதுரை,ஜூன் 18- நடிகர் சங்கத் தேர்தலை எதிர்ப்பவர்களின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகத் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல் துறவி மதுரை ஆதீனத்தைச் சந்திக்க மதுரை வந்தார் சரத்குமார். அவரிடம் ஆசி பெற்ற பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார் சரத்குமார்.

அப்போது அவர் கூறியதாவது:

#TamilSchoolmychoice

“நடிகர் சங்க விவகாரங்களில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. அவர்கள் திருமண மண்டபம் கட்டச் சொன்னார்கள். அதைவிட வருமானம் தரக் கூடிய வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் போட்டோம். அப்போதெல்லாம் குற்றம் சொல்லாதவர்கள், எங்களைச் சந்தித்து எந்தக் கருத்தும் சொல்லாதவர்கள், தற்போது தேவையில்லாமல் அவதூறு கிளப்புகிறார்கள்.

6௦ கோடி கைமாறிவிட்டது என்கிறார்கள். செயற்குழுவில் தீர்மானம் போட்டு அதைப் பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற்ற பின்புதான் நடிகர் சங்க இடத்தில் வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் போட்டோம்.

அப்போது யாரும் இதை எதிர்க்கவில்லை. இதற்கு மாற்று ஏற்பாடு இருக்கிறதென்று யாராவது என்னை வந்து சந்தித்தார்களா? அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டார்களா? என் வீட்டுக்கு வந்தார்களா? அப்படி வருகிறவர்களை நான் வரக்கூடாதென்று சொன்னேனா?

ஆனால், வணிக வளாகம் கட்டும் திட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து வாங்கினார்கள். இது எப்படிச் சரியாகும்?

எதிர்காலத்தில் நலிந்த நிலையில் வாழும் நாடக, திரைக் கலைஞர்களின் எதிர்காலத்தை முன்னிட்டுத் தான் இந்த ஒப்பந்தமே போட்டோம். இதில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஏதோ முறைகேடு நடந்துவிட்டதாகப் பரப்புகிறார்கள். பணம் கைமாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். அந்த வணிக வளாகம் கட்டும் செலவே 65 கோடிதான். அப்புறம் எப்படி 6௦ கோடி கைமாறும்.?

அந்தப்பகுதியில் வணிக வளாகம் கட்டத் தடை இருப்பதாகச் சொல்வது தவறு. அந்தப்பகுதியில் பதினைந்து வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. அதனால், இதில் தடை வராது. வணிக வளாகம் கட்டுவதற்கெனச் சில விதிகள் இருக்கின்றன. குற்றம் சாட்டுபவர்களைச் சகோதரர்களாகவே கருதுகிறேன். சங்கத்தில் என்ன முறைகேடு நடந்தது என்பதைப்  புகார் கூறுபவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும்.

நடிகர் சங்கத் தேர்தலை எதிர்ப்பவர்களின் பின்னணியில் அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. அரசியல் சதி இருப்பதைக் கண்டு கவலைப்பட வில்லை. அது எந்தக் கட்சி என்பதைச் சொல்ல மாட்டேன். நடிகர் சங்கத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம்” என்றார்.