Home உலகம் சீனாவில் நாய்க் கறித் திருவிழா: ஒரே நாளில் 10,000 நாய்களைக் கொன்று ருசிக்க இருக்கும் சீனர்கள்!

சீனாவில் நாய்க் கறித் திருவிழா: ஒரே நாளில் 10,000 நாய்களைக் கொன்று ருசிக்க இருக்கும் சீனர்கள்!

686
0
SHARE
Ad

dog_festival_008சீனா, ஜூன் 19 – சீனாவில் ஆண்டுதோறும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் ‘நாய்க் கறித் திருவிழா’வில் சுமார் 10 ஆயிரம் நாய்களை ஒரே நேரத்தில் கொன்று சமைத்து ருசித்து உண்ணும் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.

சீனாவின் குவாங்ஸி (Guangxi ) என்ற மாகாணத்தில் யூளின் (Yulin) என்ற சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். விநோதப் பழக்க வழக்கங்களைக் கொண்ட இந்த மக்கள், தங்களைக் கொடிய நோய்களிலிருந்து காத்துக்கொள்ள கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து ‘நாய்க் கறித் திருவிழா’ என்ற ஒரு விழாவை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

வரும் ஜூன் 21-ஆம் தேதி தொடங்க உள்ள இந்தத் திருவிழாவின்போது, அந்த மாகாணம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய்களை பிடித்து வந்து பூஜை செய்வார்கள்.

#TamilSchoolmychoice

பின்னர், ஒவ்வொரு நாயையும் கும்பல் கும்பலாகக் கொன்று நெருப்பில் சுட்டு எரித்து துண்டுகளாகவும் முழு நாய்களாகவும் பொதுமக்களுக்காக விற்பனைக்கு வைக்கின்றனர்.

article-2661107-1EB3C20F00000578-493_634x408இந்தப் பகுதியில் வாழும் யூளின் (Yulin) சமுதாய மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் அன்று நாய்க் கறி விருந்து அமோகமாக நடைபெறும். இந்த ஒரு நாளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் நாய்கள் கொல்லப்பட்டு இந்தத் திருவிழாவிற்குப் பயன்படுத்துவார்கள்.

சில ஆண்கள் நாய்கறி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என நம்புவதால், அவர்கள் இந்த உணவை விரும்பி ருசித்து வருகின்றனர்.

சீனர்களின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருந்தாலும், யாங் (Yang-65) என்ற சமூக ஆர்வலர் இந்தத் திருவிழாவில் கொல்லப்படும் நாய்களை மீட்க பல வழிகளில் போராடி வருகிறார்.

இந்தத் திருவிழா தொடங்குவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் தனது தியான்ஜின் (Tianjin) நகரத்திலிருந்து 1.652 மைல்கள் பயணித்து யூளின் (Yulin) நகரத்திற்குச் சென்று, நாய்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் அவற்றை விலை பேசி வாங்கி வந்து வளர்த்து வருகிறார்.

dogmeat-chinaதற்போது வரை சுமார் 15,178 பவுண்டுகள் செலவழித்து சுமார் 360 நாய்கள் மற்றும் பல பூனைகளைக் காப்பாற்றித் தனது இடத்தில் பாதுகாப்பாக வளர்த்து வருகிறார். இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பகுதியில் நாய்க் கறித் திருவிழா உற்சாகமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதிக்குப் பல வகை நாய்களை அதிக எண்ணிக்கையில் கும்பல் கும்பலாக வாகனங்களில் அடைத்துக் கொண்டு வருவதால் ‘ராபிஸ்’ எனப்படும் நோய் அதிக அளவில் பரவி வருவது அந்தச் சமுதாய மக்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

சீனாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 2 கோடி நாய்கள் கொல்லப்பட்டு உணவாகச் சமைக்கப்படுவதுடன் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை ராபிஸ் நோய் தாக்கி சுமார் 338 பேர் இறந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.