Home உலகம் அமெரிக்க அதிபர் தேர்தலில் புயலைக் கிளப்பும் வாரிசு அரசியல்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் புயலைக் கிளப்பும் வாரிசு அரசியல்!

759
0
SHARE
Ad

hqdefaultநியூ யார்க், ஜூன் 19 – உலக நாடுகளின் அரசியல் மற்றும் பொது விவகாரங்களில் தலையிட்டு தன்னைத் தலைவனாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, வாரிசு அரசியலில் சிக்கித்  தவிக்கிறது என்ற செய்தி பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆனால் அது  மறுக்க முடியாத உண்மை தான். இதனைக் கடந்த 20 வருட ஆட்சி மாற்றங்களே பிரதிபலிக்கின்றன.

வாரிசு அரசியல் என்றவுடன் பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது தெற்காசிய நாடுகளும் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் தான். ஆனால் அமெரிக்காவைப் பொருத்தவரை இந்த வாரிசு அரசியலைத் தொடங்கி வைத்தவர் ஜார்ஜ் எச்.டபில்யூ.புஷ் ஆவார். கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் 1993 வரை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த இவர் பொருளாதார வீழ்ச்சிகளால் தனது பதவியை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பில் கிளிண்டனிடம் இழந்தார். அவர் தனது பதவியை இழந்தாலும், வாரிசு அரசியலைத் துவக்கி வைத்த தருணம் அந்தத் தோல்வியாகத் தான் இருக்க வேண்டும்.

bush-clinton-obama1அமெரிக்க அதிபர்களில் மக்கள் செல்வாக்கை அதிகம் பெற்ற அதிபர்களுள் ஒருவரான பில் கிளிண்டன் 1993 முதல் 2001-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அமெரிக்க அதிபர் பதவிகளின் எழுதப்படாத விதிகளின் படி, இரண்டாவதாக ஆட்சி செய்த பிறகு அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவருக்குப் பிறகு  ஜார்ஜ் எச்.டபில்யூ.புஷ்ஷின் மகனான  ஜார்ஜ் டபில்யூ.புஷ் ஆட்சிப் பொறுப்பேற்றார். தனது தந்தை போலவே குடியரசு கட்சியின் வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற புஷ், ஈராக்குடனான போர், இரட்டைக் கோபுர இடிப்பு, அணு ஆயுத விற்பனை எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், இவர் 2004-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றார்.

#TamilSchoolmychoice

Clinton-Bushஇவரது ஓய்விற்கு பிறகு அமெரிக்க அதிபர் தேர்தலில் எப்படியேனும் தனது மனைவியான ஹிலாரி கிளண்டனை  வெற்றி பெறச் செய்துவிட வேண்டும் எனப் பில் கிளிண்டன் பல்வேறு பிரச்சார முயற்சிகளை மேற்கொண்டார். எனினும், அவை அத்தனையும் ஒபாமாவின் அரசியல் பிரவேசத்தால் தோற்றுப் போனது. அவரின் ஆட்சி காலத்தை தவிர, அதற்கு முன்பும், பின்பும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி அரசியல் தலைவர்களின் வாரிசு அரசியல் ஆதிக்கம் அப்பட்டமாக தெரிய வருகின்றது.

தற்போது ஒபாமாவின் ஆட்சி அடுத்த வருடத்துடன் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் அங்கு வாரிசு அரசியல் தலை தூக்கத் துவங்கி உள்ளது. இதனை உறுதி செய்வது போல ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் ஜெப் புஷ்ஷும் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.