Home படிக்க வேண்டும் 2 முதல் முறையாக வீழ்ச்சியைச் சந்தித்த மெக்டொனால்ட்ஸ்!

முதல் முறையாக வீழ்ச்சியைச் சந்தித்த மெக்டொனால்ட்ஸ்!

590
0
SHARE
Ad

McDonaldsநியூ யார்க், ஜூன் 20 – உலகின் பிரபல சங்கிலித் தொடர் உணவகமான ‘மெக்டொனால்ட்ஸ்’ (McDonald’s) வர்த்தக சரிவின் காரணமாகப் பல்வேறு நாடுகளில் தனது கிளை உணவகங்களை மூட முடிவு செய்துள்ளது. மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் உருவாக்கப்பட்ட காலம் முதல் இத்தகைய வீழ்ச்சியைச் சந்திப்பது இதுவே முதல் முறை என வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவலின் படி, “அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் சுமார் 350 உணவகங்களை மூட இருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஈஸ்டர் ப்ரூக் கூறுகையில், “எங்கள் நிறுவனத்திற்கான மீள் நடவடிக்கையாக உலகம் முழுவதும் உள்ள கிளை உணவகங்களில் சுமார் 350-ஐ நாங்கள் மூட முடிவு செய்துள்ளோம். அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஏற்கனவே இந்த வருடத்தின் தொடக்கத்தில் 350 உணவகங்கள் மூடப்பட்டன. எனினும், விரைவில் இந்தச் சரிவுகளில் இருந்து எங்கள் நிறுவனம் வெற்றிகரமாக மீண்டு வரும்”என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், இந்தக் கிளை உணவகங்களின் மூடல் அந்நிறுவனத்திற்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில், மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் மட்டும் சுமார் 14,300 கிளை உணவகங்கள் உள்ளன.

இதற்கிடையே மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தனது உணவுகளின் தரத்திலும், சுவையிலும் மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக அந்நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன. மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு அமெரிக்காவில் பிரபலமாகி வரும் மற்றொரு சங்கிலித் தொடர் உணவகமான ‘சிபோட்டில்'(Chipotle) காரணம் என்று கூறப்படுகிறது. மெக்டொனால்ட்ஸ் விட சிபோட்டில் உணவகங்களின் உணவுகள் சுவைமிக்கதாகவும், தரமானதாக இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.