Home உலகம் அமெரிக்கத் தேவாலய இனவெறித் தாக்குதல் கவலையளிக்கிறது – ஒபாமா!

அமெரிக்கத் தேவாலய இனவெறித் தாக்குதல் கவலையளிக்கிறது – ஒபாமா!

498
0
SHARE
Ad

Obama-email-3-990x500வாஷிங்டன், ஜூன் 20 – அமெரிக்காவில் கறுப்பு இன மக்கள் மீது வெள்ளை இனத்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்து வருவது குறித்து அதிபர் ஒபாமா கவலை தெரிவித்துள்ளார்.

தெற்கு கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த புதன்கிழமையன்று வெள்ளை இன வாலிபர் ஒருவர் புகுந்து கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டார். இந்தச் சம்பவத்தில் தேவாலயப் பாதிரியார் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவில் மிகப்பெரும் அதிர்ச்சியை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிபர் ஒபாமாவுக்கு மிகப்பெரும் கவலையும், கோபத்தையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து ஒபாமா கூறியதாவது, “இது போன்ற மிகப்பெரும் வன்முறைச் சம்பவங்கள், மற்ற வளர்ந்த நாடுகளில் நடைபெறவில்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்” என்று கவலை தெரிவித்துள்ளார்.

“மேலும், இந்த துப்பாக்கிச்சூடு முட்டாள்தனமானது என்று தெரிவித்த அவர், இது போன்ற குற்றங்களை தடுக்க மீண்டும் ஆயுதம் மூலம் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

“இது போன்ற சம்பவங்களைத் தடுத்து நிறுத்த, தேர்தலின் போது சரியான தலைவர்களைத் தெரிவுசெய்யுமாறு” ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.