Home இந்தியா மும்பை நச்சுச்சாராயத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது!  

மும்பை நச்சுச்சாராயத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது!  

630
0
SHARE
Ad

mumpaiமும்பை, ஜூன் 20 -மும்பையில் நச்சுச்சாராயத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை மலாடு மேற்கு, லட்சுமி நகர்க் குடிசைப் பகுதியில் கடந்த 17–ந் தேதி இரவு சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சிலர் வாங்கிக் குடித்தனர்..

குடித்த சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவருக்கும், வயிற்றுவலி, நெஞ்சு எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டுச் சுருண்டு விழுந்தனர்.

#TamilSchoolmychoice

உடனடியாக அவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த சாராயத்தில் நச்சுத்தன்மை இருப்பதைக் கண்டறிந்தனர்.

தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் பலர் இறந்து போனார்கள். மேலும், இப்போது பலியானோர் எண்ணிக்கை 64- ஐத் தொட்டுள்ளது. இன்னும் சிலர் இறக்க நேரிடலாம் என அஞ்சப்படுகிறது.

நச்சுச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தப் பகுதி முழுவதும் சோகமயமாகக் காட்சி தருகிறது.

mumpai2இந்தச் சம்பவம் தொடர்பாக இது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.