Home நாடு கிளைத் தலைவர்கள் – மஇகாவினர் அதிகம் இல்லாத பழனி ஆதரவுப் பேரணி!

கிளைத் தலைவர்கள் – மஇகாவினர் அதிகம் இல்லாத பழனி ஆதரவுப் பேரணி!

545
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 20 – இன்று கூட்டப்பட்ட டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு ஆதரவான பேரணி எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாமல் பிசுபிசுத்தது என இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் பார்வையாளர்களும், ஊடகவியலாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏறத்தாழ 2,500 பேர் மட்டுமே கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், கிளைத் தலைவர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்ளவில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் சுமார் 500 முதல் 600 கிளைத் தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டிருப்பார்கள் என மஇகா வட்டாரங்கள்  தெரிவித்தன.

அதே வேளையில் தொகுதித் தலைவர்களும் அதிகமான அளவில் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர் போஸ்ட் என்ற ஆங்கில செய்தி இணையத் தளம் வெளியிட்டிருக்கும் செய்தியில் கூட்டத்தில் பெண்களும், சிறுவர் சிறுமியரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

Palani-June 20 Meet - PWTC

இவர்கள் மஇகா கிளைத் தலைவர்களா? (கோலாலம்பூர் போஸ்ட் ஆங்கில இணைய செய்தித் தளம் வெளியிட்ட படம்)

Palany meeting - 20 June - PWTC

மகளிர் தலைவிகளா? மஇகா தலைவர்களா? பழனிவேல் ஆதரவுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர் (கோலாலம்பூர் போஸ்ட் ஆங்கில இணைய செய்தித்தள படம்)