Home கலை உலகம் வெற்றி – தோல்வி எதுவும் எங்களைப் பாதிக்காது; நடிகர் விஷால் விளாசல்!

வெற்றி – தோல்வி எதுவும் எங்களைப் பாதிக்காது; நடிகர் விஷால் விளாசல்!

554
0
SHARE
Ad

vishalமதுரை, ஜூன் 20- நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ எதுவும் எங்களைப் பாதிக்காது என்று நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் கூட்டாகக் கூறினர்.

நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் நேற்று காலை விமானம் மூலம் மதுரை வந்தனர்.

நடிகர் ராதாரவி மறும் சரத்குமார் இருவரும் மதுரை ஆதீனத்தைச் சந்தித்து, நடிகர் சங்கப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டதாகச் செய்தி வெளியானது.

#TamilSchoolmychoice

மதுரை ஆதீனமும், சரத்குமார் அணிக்கும் விஷால் அணிக்கும் இடையே சமரசத் தூதுவராகச் செயல்படப் போவதாக நேற்று கூறினார்.

இந்நிலையில் மதுரை வந்த விஷால் அணியினர், மதுரை ஆதீனத்தைச் சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் யாரும் ஆதீனத்தைச் சந்திக்கவில்லை.

நேரே மதுரை சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள நாடக நடிகர் சங்கத்திற்குச் சென்று ஆதரவு திரட்டினர்.

அதன்பின் அவர்கள் கூட்டாகக் கூறியதாவது:-

நடிகர் சங்கக் கட்டிடப் பிரச்சினை தான் தேர்தலை நோக்கி எங்களை அழைத்து வந்துள்ளது.. நாங்கள் ஒன்று சேர்ந்தது அரசியல் நோக்கத்திற்காகவோ பதவி ஆசைக்காகவோ அல்ல.

நடிகர் சங்கத்தில் உள்ள 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கும் தவற்றைச் சுட்டிக் காட்டும் உரிமை இருக்கிறது.. தவற்றைச் சுட்டிக் காட்டினால் திரைப்பட நடிகர்களுக்கும், நாடக நடிகர்களுக்கும் இடையே அரசியல் செய்யப் பார்க்கிறார்கள்.

நடிகர் சங்கத்திற்குச் சொந்தமான கட்டிடம் கட்டுவதற்கு அவர்கள் உறுதியளித்து, அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம். இல்லாவிட்டால் நாங்கள் தேர்தலைச் சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.

தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது.

3000 உறுப்பினர்களில் ஒரு ஓட்டு கூட எங்களுக்குக் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து நடிகர் சங்கத்திற்குச் சொந்தக் கட்டிடம் கட்டப் போராடுவோம்; கேள்வி கேட்போம்.; ஆரோக்கியமான எதிர்க்கட்சி போலச் செயல்படுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.