Home நாடு கேஎல்-பட்டர்வர்த் மின்சார இரயில் சேவை அடுத்த மாதம் தொடக்கம்!

கேஎல்-பட்டர்வர்த் மின்சார இரயில் சேவை அடுத்த மாதம் தொடக்கம்!

496
0
SHARE
Ad

Liow-Tiong-Laiசித்தியவான், ஜூன் 22 – கோலாலம்பூரில் – பட்டர்வர்த் இடையிலான மின்சார இரயில் சேவை (Electric Train Service) அடுத்த மாதம் துவங்கும் எனப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.

இந்த இரயில் சேவை இயக்கத்தின் செயல்திறன் குறித்து ஈப்போவிலிருந்து கோலாலம்பூர் வரை சோதனை ஓட்டம் ஒன்றை நடத்த கூட்டரசு மற்றும் பேரா மாநிலத் தலைவர்கள் முயற்சி செய்து வருவதாகவும் லியாவ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மின்சார இரயில் சேவை மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் ஒன்று என்றும், வரும் ஜூலை 9-ம் தேதி முதல் இந்தச் சேவை, பல முக்கிய அறிவிப்புகளோடு அமலுக்கு வரும் என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice