Home நாடு புதிய கூட்டணியோடு பக்காத்தான் மீண்டும் எழுச்சி பெறும் – அன்வார் உறுதி!

புதிய கூட்டணியோடு பக்காத்தான் மீண்டும் எழுச்சி பெறும் – அன்வார் உறுதி!

653
0
SHARE
Ad

Datuk-Seri-Anwar-Ibrahim-610x356

கோலாலம்பூர், ஜூன் 23 – தற்போது  நிலவி வரும் பிரச்சனைகளைக் கடந்து பக்காத்தான் புதிய கூட்டணியுடன் மீண்டும் புத்துயிர் பெற்று எழும் என முன்னாள் எதிர்கட்சித் தலைவர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

ஓரினப்புணர்ச்சி வழக்கில் அன்வார் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டுச் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவர் தனது வழக்கறிஞர் மூலம் பக்காத்தான் கூட்டணியின் ஒருங்கிணைப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது. நாம் ஒன்றிணைந்து வலிமையாகப் போராடப் போகிறோம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நமது கூட்டணியில் அரசு சாரா இயக்கங்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும். அப்படிக் கூட்டணி உருவாகிற சமயத்தில் நமது வலிமை என்ன என்பது வெளி உலகத்திற்குத் தெரிய வரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், அன்வாரின் இந்த அறிக்கையில், பக்காத்தான் பிளவு பெற்றது குறித்தோ அல்லது ஒருங்கிணைய இருக்கும் புதிய கட்சிகள் குறித்தோ எத்தகைய தகவல்களும் வெளியிடப்படவில்லை.

அன்வாரின் இந்த அறிக்கையை உறுதி செய்யும் வகையில் பாஸ் வட்டாரங்களும், பக்காத்தான் கூட்டணியின் எழுச்சி பற்றித் திரை மறைவுப் பேச்சுக்களைத் தொடங்கி உள்ளன.

கடந்த வாரம், பக்காத்தான் கூட்டணியை முறித்துக் கொண்ட ஜசெக, பக்காத்தான் மடிந்துவிட்டதாக அறிவித்தது.

அதனைக் கண்டித்த பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங், ஜசெக என்ற ஒரு கட்சி மட்டும் பக்காத்தான் அல்ல என்றும், ஜசெக இல்லாமலும் பக்காத்தான் நிலைத்து நிற்கும் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.