Home நாடு மெல்போர்னில் மாரா அதிகாரிகள் சொத்து மோசடி – ‘தி ஏஜ்’ பத்திரிக்கை குற்றச்சாட்டு!

மெல்போர்னில் மாரா அதிகாரிகள் சொத்து மோசடி – ‘தி ஏஜ்’ பத்திரிக்கை குற்றச்சாட்டு!

942
0
SHARE
Ad

mara-maccகோலாலம்பூர், ஜூன் 24 – மெல்போர்னில் மாரா அதிகாரிகள் சிலர் சொத்து மோசடி செய்திருப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது குறித்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது விசாரணையைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய பத்திரிக்கையான தி ஏஜ், மெல்போர்ன் சொத்து மோசடியின் பின்னணியில் சில மாரா அதிகாரிகள் இருப்பதாகச் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்திக் குறிப்பில், “சில பணக்கார அதிகாரிகள் கடந்த 2013-ம் ஆண்டு மெல்போர்னில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்க மலேசிய அரசின் நிதியைப் பயன்படுத்தியுள்ளனர்.”

“குறிப்பிட்ட சில அதிகாரிகள் இதற்காக 13.8 மில்லியன் ரிங்கிட் கொடுத்து மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்” என்று அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.