Home கலை உலகம் “என் ஆதரவு எப்போதும் அப்பாவுக்குத் தான்!”- சரத்குமார் மகள் வரலட்சுமி.

“என் ஆதரவு எப்போதும் அப்பாவுக்குத் தான்!”- சரத்குமார் மகள் வரலட்சுமி.

888
0
SHARE
Ad

varaசென்னை, ஜூன் 24- சரத்குமார் மகள் வரலட்சுமியும் விஷாலும் நெருங்கிய நண்பர்கள்.

சுந்தர்.சி இயக்கிய’ மதகஜராஜா’ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உருவானது.

நீண்ட நாள் ஆகியும் படம் வெளியாகவில்லையென்றாலும், இருவரது நட்பும் நீண்டு வருகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாருக்கும் விஷாலுக்கும்  நேரடி மோதல் ஏற்பட்டது.

சரத்குமாருக்கு எதிராக அவருடைய மகள் வரலெட்சுமி தான் விஷாலைத் தூண்டி வருகிறார் என்று செய்திகள் வெளியாயின.

இதனை மறுத்த வரலட்சுமி, அத்தகைய செய்திகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக  அவர்,  “உண்மை ஏதுமில்லாத முட்டாள் தனமான செய்திகளைப் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்து விட்டேன்.

நம்பகத்தன்மையான செய்திகள் இல்லை என்றால், எழுதுவதற்கு உரிமை இல்லை. ஒரு விசயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் எப்போதுமே என் அப்பா சரத்குமாருக்குதான் ஆதரவு தருவேன்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.