Home கலை உலகம் ஆர்யா நடிக்கும் ஏடிஎம்கே( ADMK) படம்!

ஆர்யா நடிக்கும் ஏடிஎம்கே( ADMK) படம்!

703
0
SHARE
Ad

arya3சென்னை, ஜூன் 25- சில வருடங்களுக்கு முன் சரவண சுப்பையா இயக்கத்தில் ஷாம், சினேகா நடித்து ‘ஏபிசிடி’ (ABCD) என்னும் தலைப்பில் ஒரு படம் வெளிவந்தது  நமக்கெல்லாம் தெரியும்.

தலைப்பில் உள்ள ‘ஏபிசிடி’ என்பது, படத்தில் வரும் முக்கியமான நான்கு பேரின் முதல் எழுத்தைக் குறிப்பதாகச் சொல்லப்பட்டது.

அதே பாணியில் ஆர்யா நடிக்கும் ஒரு படத்திற்கு இப்போது தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பெங்களூர் டேய்ஸ்’ படத்தைப் பிவிசி நிறுவனம் தமிழில் மறுபதிப்பு செய்கிறது. இப்படத்தைத் தெலுங்கு’ பொம்மரிலு’வை இயக்கிய பாஸ்கர் இயக்குகிறார். ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு முதலில் ‘சிங்கப்பூர் நாட்கள்’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

இப்போது அந்தத் தலைப்பை மாற்றி  ‘ஏடிஎம்கே'( ADMK)  என்று பெயர் வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது, முக்கியக் கதாபாத்திரமான அர்ஜூன்,திவ்யா மற்றும் கார்த்திக் என்ற பெயர்களின் முதல் எழுத்தைக் கொண்டு படத்திற்குத் தலைப்பு வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதிமுக- வின் (ADMKன்) அலை வீசும் இந்தச் சமயத்தில் இப்படியொரு தலைப்பு வைத்தால் வியாபார ரீதியில் நன்றாக இருக்கும் என்கிற கணிப்பில் இந்தத் தலைப்பை வைக்கலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள்.

உரிய இடத்தில் இருந்து அனுமதி கிடைத்தவுடன் இத்தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.