Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தலுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு!

நடிகர் சங்கத் தேர்தலுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு!

422
0
SHARE
Ad

hqdefaultசென்னை, ஜூன் 25- ஜூலை 15 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல்  தேதியை மாற்ற வேண்டும் என்றும், தேர்தல் நடைபெறும் இடத்தையும் மாற்ற வேண்டும் என்றும் விஷால் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதேசமயம், தேர்தலுக்குத் தடை விதிக்கக்கோரி பூச்சி முருகன் தனியாக வழக்கு தொடர்ந்தார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்.

மேலும், நாளை நடைபெற உள்ள வேட்பு மனுத் தாக்கலுக்கும் தடை விதிக்க மறுத்துவிட்டது.