Home உலகம் நாசா அனுப்பிய ஏவுகணை நடுவானில் வெடித்துச் சிதறியது! (காணொளியுடன்)

நாசா அனுப்பிய ஏவுகணை நடுவானில் வெடித்துச் சிதறியது! (காணொளியுடன்)

558
0
SHARE
Ad

nasaப்ளோரிடா, ஜூன் 29 – விண்வெளியில் உள்ள அனைத்துலக ஆராய்ச்சி மையத்திற்கான பொருட்களைச் சுமந்து சென்ற ஏவுகணை ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியது.

உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்வெளியில், அனைத்துலக விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்து வருகிறது.

இந்த ஆய்வு மையத்தில் தற்போது உள்ள விண்வெளி வீரர்களுக்காக உணவு, உடை உள்ளிட்ட பொருட்களைச் சுமந்தபடி ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமான பால்கன் 9 என்கிற ஆளில்லா ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள  கேப்கார்னிவல் ஏவுதளத்திலிருந்து அனுப்பப்பட்ட அந்த ஏவுகணை புறப்பட்ட 2 நிமிடம் 19 விநாடிகளில், நடுவானில் வெடித்துச் சிதறியது. விண்ணில் வெடித்துச் சிதறிய பால்கன் 9 ஏவுகணையின் பாகங்கள் அட்லாண்டிக் கடலில் விழுந்தன.

nasa,ஏவுகணையின் முன் பகுதியில் ஏற்பட்ட கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என  முதல்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவு வந்த பிறகே ஏவுகணை வெடித்துச் சிதறியது எதனால் என்பது குறித்த  முழு விபரம் தெரிய வரும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர்  கெவன் ஷாட்வெல் தெரிவித்தார்.

இந்த விபத்தால் தங்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா ஆய்வு மைய அதிகாரி வில்லியம் கேர்ச்ட்டேன்மியர் தெரிவித்தார். எதிர் காலத்தில் இது போன்ற விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.