Home உலகம் பூங்காவில் சிங்கப்பூர்-ஆஸ்திரேலியப் பிரதமர்களின் சமையல்!

பூங்காவில் சிங்கப்பூர்-ஆஸ்திரேலியப் பிரதமர்களின் சமையல்!

549
0
SHARE
Ad

abottசிங்கப்பூர், ஜூன் 29 – சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டுடன் சிங்கப்பூர் பூங்காவில் ஒன்றில் உணவு சமைத்த நிகழ்ச்சிக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இரு நாட்டுப் பிரதமர்களும் தங்கள் பதவி மற்றும் நிலையைப் பொருட்படுத்தாது, மக்களோடு மக்களாக உணவு சமைத்தது ஆச்சரியம் அளிப்பதாகப் பன்னாட்டு தலைவர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

அரசு முறைப் பயணமாகச் சிங்கப்பூர் வந்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட், நேற்று லீ சியான் லூங்கைச் சந்தித்தார். இரு நாடுளின் நட்புறவு 50 ஆண்டுகள் கடந்து நிலைத்து இருப்பதைக் கொண்டாடும் வகையில், சிங்கப்பூரில் பிஷன்-அங் மோ கியோ பூங்காவில் திறந்த வெளி உணவு சமைத்தல் மற்றும் பரிமாறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரு நாட்டுப் பிரதமர்களும் கலந்து கொண்டு, தங்கள் குழுக்களின் சார்பில் உணவு சமைத்தனர்.  இதற்காகப் பிரத்யேக அடுப்புகளும், உணவு சமைப்பதற்கான சாமான்களும் வரவழைக்கப்பட்டன.

hsien-abott3அபோட், லீ சியான் லூங்கிற்கு ஆஸ்திரேலியாவில் கலாச்சார உணவான மாட்டிறைச்சியைச் சமைத்துக் கொடுத்தார். லீ சியான் லூங், அபோட்டிற்கு டுரியன் பழங்களைச் சாப்பிடுவதற்குக் கொடுத்தார். தாங்கள் அங்கம் வகிக்கும் நாடுகளின் உறவு என்றும் மாறாது என இரு நாட்டுப் பிரதமர்களும் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

hsien-abott2இதனைத் தொடர்ந்து இன்று அரசு ரீதியாகச் சியான் லூங்கைச் சந்திக்கும் அபோட், இரு நாடுகளின் இராணுவம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பாகப் பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்த இருப்பதாகச் சிங்கப்பூர் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.