Home நாடு ஜோகூர் பாருவில் 6 வீடுகள் நிலச்சரிவில் புதையுண்டன!

ஜோகூர் பாருவில் 6 வீடுகள் நிலச்சரிவில் புதையுண்டன!

758
0
SHARE
Ad

dama.transformedஜோகூர் பாரு, ஜூன் 29 – ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 வீடுகள் சரிந்து தரைமட்டமாயின. இந்த சம்பவத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 11 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் அடங்குவர்.

என்றாலும், அவர்களில் யாரும் அதிர்ஷ்டவசமாகக் காயமடையவில்லை என ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் அப்துல் வாஹிப் மூசா தெரிவித்துள்ளார்.

கம்போங் தஹானா ஜாலான் படு என்ற இடத்தில் நள்ளிரவு 12.30-க்கு நடந்த இந்த நிலச்சரிவில் 30,000 வெள்ளி நஷ்டமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போது அந்த வீடுகளில் தங்கியிருந்த இந்தோனேசிய குடும்பங்கள் அவர்களின் உறவினர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் வாஹிப் மூசா தெரிவித்துள்ளார்.

படம்: தீயணைப்புத்துறை