Home கலை உலகம் சிக்கல் தீர்ந்தது: திட்டமிட்டபடி ‘பாபநாசம்’ படம் வெளியாகும் – படக்குழுவினர் தகவல்!

சிக்கல் தீர்ந்தது: திட்டமிட்டபடி ‘பாபநாசம்’ படம் வெளியாகும் – படக்குழுவினர் தகவல்!

638
0
SHARE
Ad

maxresdefaultசென்னை, ஜூன் 29 – கமலின் ‘பாபநாசம்’ படத்துக்குக் கடைசிநேரத்தில் விநியோகஸ்தர்களால் சிக்கல் ஏற்பட்டுப் பரபரப்பானது. ‘பாபநாசம்’ படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், இந்தச்சிக்கலுக்கும் சம்பந்தம் இல்லையென்பதால் இதுதொடர்பாகக் கமலைச் சந்திக்க விநியோகஸ்தர்கள் தரப்பு முயன்றதாம்.

இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட கமல், தூங்காவனம் படப்பிடிப்புத் தளத்துக்கு எல்லோரையும் வரச்சொல்லிவிட்டாராம். அங்கு அமர்ந்து சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேல் நீடித்த பேச்சுவார்த்தையின் விளைவாகப் ‘பாபநாசம்’ படத்துக்கான சிக்கல் முடிவடைந்துவிட்டதாம்.

அந்தப் பேச்சுவார்தையின் போது உத்தமவில்லன் சமயத்தில் ஒப்புக்கொண்டது போல் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதென்றும், அதைத் ‘தூங்காவனம்’ படம் முடிந்தவுடனே தொடங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

#TamilSchoolmychoice

அந்தப் படத்தைத் ‘திருப்பதிபிரதர்ஸ் நிறுவனமே’ தயாரிப்பதா அல்லது அந்த நிறுவனம் மற்றும் கமல் இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றொருவர் தயாரிப்பதா என்பது இனிமேல்தான் முடிவாகும் என்று சொல்கிறார்கள்.

இதனால் ‘பாபநாசம்’ படத்துக்கெதிராக விநியோகதர்களின் எதிர்ப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதால் படம் எந்தச் சிக்கலும் இன்றித்  திட்டமிட்டபடி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

உடனடியாகக் கமல் இந்தவிசயத்தில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்துப் பேசியதால் சிக்கல் உடனே தீர்ந்தது என்று படக்குழுவினர்கள் சொல்கிறார்கள்.