Home இந்தியா ஜெயலலிதாவிற்கு எதிரான கர்நாடக மேல்முறையீடு மனு அடுத்த வாரம் விசாரணை!

ஜெயலலிதாவிற்கு எதிரான கர்நாடக மேல்முறையீடு மனு அடுத்த வாரம் விசாரணை!

378
0
SHARE
Ad

jayalalitha1புதுடெல்லி, ஜூன் 30 – வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஓரிருநாட்களில் உச்சநீதிமன்றத்தில் தொடங்க உள்ளது.

இந்த மனு மீதான விசாரணையில் தங்களுக்குப் பாதகமான அம்சங்களாக இருப்பதாகக் கருதுவதால், ஜெயலலிதா கவலையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது உச்சநீதிமன்றத்துக்குக் கோடை விடுமுறைக் காலமாகும். வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றம் வழக்கமாக இயங்கத் தொடங்கும். ஆகையால், ஜூலை முதல் வாரத்தில் மேல்முறையீடு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

அப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலையில் 3 வாய்ப்புகளைத் தான் உச்சநீதிமன்றம் பரிசீலிக்குமாம். அதாவது உச்ச நீதிமன்றம் இப்போது கோடைக்கால விடுமுறையில் இருக்கிறது. ஜூலை 1-ஆம் தேதியில் இருந்துதான் செயல்படும்.

கர்நாடகாவின் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படலாம்;

அல்லது கர்நாடகாவின் மனுவை ஏற்றுக்கொண்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்காமல் மேல்முறையீட்டு விசாரணையை மட்டும் தொடங்கலாம்; அல்லது தொடக்கத்திலேயே மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யலாம்.

இந்த மூன்றில்தான் நிச்சயம் நடக்கும் என்கிறது உச்சநீதிமன்ற வட்டாரங்கள். இருப்பினும் மூன்றில் 2 வாய்ப்புகள் ஜெயலலிதாவுக்குப் பாதகம் என்பதால், கவலையாக இருக்கிறது என்கிறது அதிமுக வட்டாரங்கள்.