Home உலகம் ஐ.எஸ் தீவிரவாதிகள் பிரிட்டனைத் தாக்கத் திட்டம் – டேவிட் கேமரூன் எச்சரிக்கை!

ஐ.எஸ் தீவிரவாதிகள் பிரிட்டனைத் தாக்கத் திட்டம் – டேவிட் கேமரூன் எச்சரிக்கை!

476
0
SHARE
Ad

The-Prime-Minister-David--010பிரிட்டன், ஜூன் 30 – பிரிட்டனில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் நடத்துவதற்கான சதி திட்டத்தில் ஈடுப்பட்டிருப்பதாகப் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பிரதமர் கேமரூன் இன்று அளித்த பேட்டியில், ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் பிரட்டன் மற்றும் பிற நாடுகளில் பயங்கரமான தாக்குதல்கள் நடத்த சதித் திட்டம் தீட்டிவருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றார்.

மேற்கத்திய நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு இருக்கும் வரை, பிரித்தானியாவிற்கும் பிற நாடுகளுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து கொண்டே இருக்கும்.

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை அன்று துனிசியாவில் தீவிரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பிரிட்டனைச் சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, பிரதமர் கேமரூன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

துனிசியாவில் நடந்த இந்தத் தாக்குதல் வரலாற்றில் நடந்த மிகத் துயரமான சம்பவங்களில் ஒன்று எனக்கூறிய அவர், பிரித்தானிய குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை முற்றிலுமாக ஒடுக்க முடியும் என்றாலும், அதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாளிகளை அழிக்க ஈராக், சிரியா நாடுகளுக்கு பிரித்தானிய ராணுவத்தை அனுப்புவீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த கேமரூன், ஒரு நாட்டிற்கு ராணுவத்தை அனுப்பி போரிட்டு ஜெயிப்பது எளிது.

ஆனால், அதன் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். எனவே, பிரிட்டன் தனது உள்நாட்டில் மட்டும் ராணுவத்தை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபடும் எனக் கேமரூன் கருத்து தெரிவித்துள்ளார்.